ஒரே ஒரு வார்த்தை.. கேரள சிறுமியை அழ வைத்த த.வெ.க தலைவர் விஜய் - வைரலாகும் Video!

Vijay Tamil Cinema Actors Tamil Actors Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Feb 10, 2024 02:37 PM GMT
Report

விஜய் சினிமாவில் நடிக்கமாட்டார் என்பதால் கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழக வெற்றி கழகம்

நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்தார் நடிகர் விஜய்.

ஒரே ஒரு வார்த்தை.. கேரள சிறுமியை அழ வைத்த த.வெ.க தலைவர் விஜய் - வைரலாகும் Video! | Kerala Kid Cries After Hearing Vijays Decision

அதன்படி கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய்யின் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படத்தை முடித்துவிட்டு, முழுவதுமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியல்‌ எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என்‌ ஆழமான வேட்கை.

அதில்‌ என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்‌. என்‌ சார்பில்‌, நான்‌ ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம்‌ சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில்‌ முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள்‌ சேவைக்கான அரசியலில்‌ ஈடுபட உள்ளேன்‌.

த.வெ.க தலைவர் விஜய் குறித்த கேள்வி; முகம் மாறிய ரஜினி - என்ன சொன்னாரு தெரியுமா..?

த.வெ.க தலைவர் விஜய் குறித்த கேள்வி; முகம் மாறிய ரஜினி - என்ன சொன்னாரு தெரியுமா..?

வைரலாகும் வீடியோ 

அதுவே தமிழ்‌ நாட்டு மக்களுக்கு நான்‌ செய்யும்‌ நன்றி கடனாக கருதுகிறேன்‌" என்று தெரிவித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தாலும், சினிமாவிலிருந்து அவர் விலகுவது, ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்துள்ளது.

ஒரே ஒரு வார்த்தை.. கேரள சிறுமியை அழ வைத்த த.வெ.க தலைவர் விஜய் - வைரலாகும் Video! | Kerala Kid Cries After Hearing Vijays Decision

இந்நிலையில் விஜய் சினிமாவில் நடிக்கமாட்டார் என்பதால் கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த சிறுமியின் தந்தை "இனி விஜய் மாமா படங்களில் நடிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் சிறுமி எதுவும் சொல்லாமல் அழத் துவங்கிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், விஜய் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவர் மனதிலும் இருக்கிறார் என்றும் அந்த குழந்தைக்கு விஜய் மீது அவ்வளவு பாசம் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.       

பீரியட்ஸ் நேரத்தில்தான் அதெல்லாம் நடக்கும்.. முடியாதுனு சொல்லுவேன் - நடிகை அஞ்சலி பளீச்!

பீரியட்ஸ் நேரத்தில்தான் அதெல்லாம் நடக்கும்.. முடியாதுனு சொல்லுவேன் - நடிகை அஞ்சலி பளீச்!