எரிமலை மீது அமர்ந்திருக்கிறோம் - கொரோனா பரவல் குறித்து பிணராயி விஜயன்
India
Corona
Kerala
Pinarayi Vijayan
By mohanelango
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பும் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களுள் கேரளாவும் ஒன்று. அங்கு நாள்தோறும் சராசரியாக 20,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
கேரளாவில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பிணராயி விஜயன், “கேரளா இப்போது எரிமலையின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களைத் தவிர்த்து கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற கேட்டுக் கொண்டுள்ளார்”