கிச்சனுக்குள் புதைக்கப்பட்ட கள்ள காதலி - சடலத்தோடே வாழ்ந்த சைகோ காதலன்
கேரளாவில் கள்ள காதலியை கொலை செய்து கிச்சனில் புதைத்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பணிக்கன்குடியில் 49 வயதான பினோய் என்ற நபர் வசித்துவந்தார்.
இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதான சிந்து என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. காதலி சிந்துவோ ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்து மகனோடு தனியாக வாழ்ந்து வருபவர்.
இந்த நிலையில், பினோயும், சிந்துவும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். சில நாட்கள் கடந்த பிறகு இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனம் நொந்த சிந்து, முதல் கணவரிடமே சென்று விடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பினோய் கடந்த வாரம் சிந்துவை கொடூரமாக தாக்கி கொலை செய்து வீட்டில் உள்ள சமையலறையிலேயே சடலத்தை புதைத்துள்ளார். பின்னர் சமையலறையிலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இது குறித்து சிந்துவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், புதைக்கப்பட்டிருந்த சடலத்தை மீட்டு பினோயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.