"ஹிஜாப் விவகாரம், முஸ்லிம் பெண்களை நான்கு சுவர்களுக்குள் அடைக்க திட்டமிட்ட சதி" - கேரள ஆளுநர் கருத்து
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்’அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல திட்டமிட்ட சதி என்று கேரள ஆளுநர் ஏ.எம்.கான் கருத்து தெரிவித்துள்ளார்.
"ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, மாறாக முஸ்லிம் இளம் பெண்களை அவர்களது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைக்க திட்டமிட்ட சதியாக நான் உணர்கிறேன்.
அவர்கள் ஆண் பிள்ளைகளைவிட மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவர்களை ஊக்கமளிக்கவில்லை." என கூறியுள்ளார்.