லட்சத்தீவின் புதிய சீர்திருத்தங்கள்....! 2 வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள்.. மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

kerala lakshadweep
By Irumporai May 28, 2021 12:22 PM GMT
Report

லட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக, இரண்டு வாரத்திற்குள், மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என கேரள உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலாவுக்கு பெயர் போன லட்சத்தீவில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். இவர் கொண்டு வந்துள்ள பல சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல் பிரபலங்கள் பாலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், லட்சத்தீவு நிர்வாகியின் நிர்வாக சீர்த்திருத்தங்களை எதிர்த்து மலப்புரத்தை சேர்ந்த கே.பி நவ்சாத் அலி மற்றும் கேரள மாநில காங்கிரஸ கட்சி செயலாளர் காவரட்டியைச் சேர்ந்த முகமது சாதிக் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர் . இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இரண்டு வாரத்திற்குள், இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.