கடுமையான சிறுநீரக கோளாறு: அழகுசாதனப்பொருளால் வந்த வினை

Kerala
By Fathima Nov 22, 2026 04:10 AM GMT
Report

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான அழகுசாதனப்பொருளை பயன்படுத்தியதால் 17வயது சிறுமி கடுமையான சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீமை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஈர்க்கப்பட்டு குறித்த க்ரீமை வாங்கியுள்ளார், தொடக்கத்தில் க்ரீம் பயன்படுத்தியதும் மாற்றம் தெரிந்ததால் அதையே ஓராண்டாக வாங்கி பயன்படுத்தியுள்ளார்.

கடுமையான சிறுநீரக கோளாறு: அழகுசாதனப்பொருளால் வந்த வினை | Kerala Girl Use Cream Kidney Issue

ஆனால் அவரது உடல்நிலையில் மாற்றம் தெரிந்தது, இரத்த அழுத்த குறைபாடு மயக்கம் ஏற்பட்டது, கால்களில் வீக்கம் ஏற்பட்டு கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது சிறுமியின் உடலில் பாதரசம் அதிகம் இருந்தது தெரியவந்தது.

இதற்கு காரணம் சிறுமி பயன்படுத்திய க்ரீமே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி பயன்படுத்திய க்ரீமில் 12500 பிபிஎம் அளவில் பாதரசம் இருந்துள்ளது, இது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும்.

க்ரீம் பயன்படுத்தியதும் உடல்நிலை மோசமடைவதாக சிறுமி நிறுவனத்திடம் கூறியதும் உயர்அதிகாரிகளிடம் பேசுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர், அதன்பின்னர் எந்த பதிலும் இல்லை.

இதனைதொடர்ந்து குறித்த நிறுவனம் மீது வழக்கு தொடர சிறுமியின் பெற்றோர்கள் முடிவு செய்திருந்த நிலையில் கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது.

ஆன்லைனில் பார்த்து இதுபோன்ற க்ரீம்கள் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், சரும மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளர்.