கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை இல்லை - மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! பொய் சொல்வது யார்?
பழனியில் கேரள பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த பெண், கடந்த 19-ஆம் தேதி பழனி முருகன் கோயிலுக்கு வந்துள்ளார்.
அப்போது, தான் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கேரளா மாநிலம் கண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கேரளா காவல்துறையும், தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியது.
இதனை அடுத்து பழனி காவல்துறையினர் கடத்தல் மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பெண் ஆய்வாளர் தலைமையில் 3 விசாரணை குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கூடுதல் விசாரணை நடத்த ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படை குழுக்கள் கேரளா விரைந்தது.
இந்த வழக்கில் திடீரென புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பழனியில் கேரள பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
புகாரளித்த பெண்ணிடன் விசாரணை நடத்த தமிழக போலீசார் குழு, கேரளா சென்றுள்ளது.
சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருவரும் நடமாடியதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.