Tuesday, May 13, 2025

கேரளாவில் பதறாமல் பாம்பை பிடித்த பெண் வன அதிகாரி - வைரலாகும் வீடியோ

Kerala Women Forest Viral Video Catcher
By Thahir 3 years ago
Report

குடியிருப்பு பகுதியில் புகுந்த நல்ல பாம்பு ஒன்றை பெண் வன அதிகாரி ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டக்கடா குடியிருப்பு பகுதிக்குள் நல்லப்பாம்பு ஒன்று புகுந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரி ஜி.எஸ்.ரோஷினி பாம்பை பிடிக்க களத்தில் இறங்கினார்.

கேரளாவில் பதறாமல் பாம்பை பிடித்த பெண் வன அதிகாரி - வைரலாகும் வீடியோ | Kerala Forest Women Catcher Viral Video

அப்போது நல்லப்பாம்பு சீறிப்பாய்ந்து வன அதிகாரியை ரோஷினியை தீண்ட முயன்றது.ஆனால் ரோஷினி பதற்றம் இல்லாமல் பாம்பை லாவகமாக பிடித்து பையில் போட்டு கட்டினார்.

பாம்பு பிடிப்பதை பதற்றத்துடன் பார்த்த குடியிருப்பு வாசிகள் ரோஷினியை வெகுவாக பாராட்டினர். ரோஷினி திருவனந்தபுரம் மாவட்டத்தின் பயிற்சி பெற்ற வனக்காப்பாளர் ஆவார்.

இவர் பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர். ரோஷினி பாம்பு பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.