கேரளாவில் கனமழை எதிரொலி; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Kerala
By Nandhini Aug 29, 2022 10:54 AM GMT
Report

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து கேரளாவில் உள்ள 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் -

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலங்களில் பல இடங்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்படும்.

இதனையடுத்து, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

kerala rain

நேரிமங்கலம் தொடுபுழா பூஞ்சார் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நிலம் நிரம்பியுள்ளது. சாதாரண கனமழை கூட நிலச்சரிவை ஏற்படுத்துகிறது.

கேரளத்தின் நிலப்பரப்பில் 14.5% வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும். எனவே, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, மேற்கு இடுக்கி மாவட்டங்களின் உள்பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வும் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.