வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா - பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

Kerala flood 11th exam postponed
By Anupriyamkumaresan Oct 18, 2021 10:54 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என மாநிலம் முழுவதும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்தும் மீட்பு பணிக்கு மீட்பு குழு விரைந்துள்ளது. இந்நிலையில், பலத்த மழை காரணமாக மாநிலத்தில் பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவன் குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா - பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைப்பு | Kerala Flood 11Th Public Exam Postponed

இதுகுறித்து, கேரள பொது கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதே போல் கேரள பல்கலைக்கழகம், எம்.ஜி.பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைகழகங்களின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.