மகள் தூக்கில் தொங்கியதை கணவனிடம் சொல்லப்போன தாய்க்கு பேரதிர்ச்சி! என்ன நடந்தது?
கேரள மாநிலத்தில் மகள் தூக்கில் தொங்கியதை கணவனிடம் சொல்ல ஓடோடிய தாய், கணவனும் தூக்கிட்டு சடலமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பீதாம்பரன், விமானநிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் இவரது மனைவி பிரபாவதி மற்றும் மகள் ஷரிகாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபாவதி உணவு அருந்திவிட்டு படுத்து தூங்கிவிட்டார். சிறுது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது, மகள் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கணவனிடம் சொல்ல ஓடோடியுள்ளார். அப்போது கணவனின் அறை பூட்டப்பட்டிருந்ததால், அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்துள்ளார்.
அப்போது கணவனும் மின்விசிறியால் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். ஒரு குடும்பத்தில் உள்ள இரு உயிர்களையும் இழந்து பிரபாவதி நிற்கதியாக இருந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.