40000 தாண்டிய கொரோனா பாதிப்பு: கேரளாவில் முழு ஊரடங்கு அமல்

Corona Lockdown Kerala Pinarayi Vijayan
By mohanelango May 06, 2021 06:09 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. 

இதனால் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவிலும் மீண்டும் புதிய முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் தென் மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கேரளாவில் நேற்று முதல் முறையாக 40,000-க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனால் கேரளாவில் மே 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையை கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.