கேரளாவில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

corona kerala
By Irumporai Aug 25, 2021 01:27 PM GMT
Report

கேரளவில் ஒரே நாளில் 31,445 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே இன்று ஒரே நாளில் 31,445 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 20 ஆம் தேதிக்குப் பின்னர் கேரளாவில் இவ்வளவு பெரிய அளவில் தொற்று உறுதியாகியுள்ளது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது மேலும், கேரளாவில் ஒரே நாளில் கொரோனாவால் 215 பேர் உயிரிழந்துள்ளனர். 20,271 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.