கேரளாவில அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- மத்திய குழு விரைந்தது

kerala-corona-virus-india
By Jon Jan 08, 2021 12:11 PM GMT
Report

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது கொரோனாவை கட்டுப்படுத்திய முதன்மை மாநிலமாக கேரளா விளங்கியது.

கொரோனா பாதிப்புகளே பதிவாகாத நாட்களும் இருந்தன. ஆனால் பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கத் தொடங்கிய பிறகு கேராளாவில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வந்தன.

தற்போது தேசிய அளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்தாலும் கேரளாவில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதுபற்றி மத்திய சுகாதாரத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் கேரளாவுக்கு மத்திய சுகாதாரத்துறையின் நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ம் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சிங் தலைமையில் ஒரு குழு நாளை கேரளா வருகிறது.

அவர்கள் மாநிலத்தில் நோய் அதிகம் பரவும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார்கள். மேலும் கேரளாவில் மட்டும் கொரோனா அடங்க மறுப்பது ஏன்? என்பது பற்றியும் ஆலோசிக்கிறார்கள். உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் இரண்டாம் அலை பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.