கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா..ஒரே நாளில் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

case corona kerala cross 37000
By Praveen Apr 30, 2021 05:02 PM GMT
Report

கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 37 ஆயிரத்து 199 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 71 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 733 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 17 ஆயிரத்து 500 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 61 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.