‘குளிச்சு ரொம்ப நாளாச்சுப்பா’ - மாற்றுத்திறனாளியை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்த போலீஸ்காரர்

Kerala
By Swetha Subash Apr 27, 2022 11:52 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் சிவில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூவார் விராளி பகுதியை சேர்ந்த ஷைஜு.

இவர் நெய்யாற்றின்கரை ஆலும்மூடு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாற்றுத்திறனாளி முதுயவர் ஒருவர் ஷைஜூவிடம் வந்து சோப்பு வாங்கி தருவீங்களா, குளித்து ரொம்ப நாட்கள் ஆயிடிச்சு என்று கேட்டார்.

அவர் கேட்டவுடனே ஷைஜு அருகில் உள்ள ஒரு கடையில் இருந்து சோப்பை வாங்கி முதியவரிடம் கொடுத்துள்ளார். உடனே அந்த முதியவர் சோப்புடன் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயின் அருகே சென்று குளிக்க முயற்சிப்பதை ஷைஜு கவனித்தார்.

மேலும் முதியவர் உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்க முடியாமல் அவதியடைந்துள்ளார். இதனை பார்த்த உடனே ஷைஜு, பக்கத்து கடையில் இருந்து வாளியும் கோப்பையும் வாங்கி வந்து அந்த முதியவரைக் குளிக்க வைத்து, புது உடை மற்றும் உணவும் வாங்கி கொடுத்தார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் செய்தியாளர்கள் இதனை படம் பிடித்து செய்தி ஆக்க அங்கு வந்ததும், அவர்களிடம் தான் செய்தது தனது வேலையின் ஒரு பகுதி எனவும் தனது கடமை என்றும் எளிதாக சொல்லிவிட்டுச் சென்றார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, நெய்யாண்டிங்கரை இளைஞர் குழு சார்பில் ஷைஜூவை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.ஷிபு அவருக்கு நினைவு பரிசு வழங்கினார்.