பம்பை நதியில் Coliform பாக்டீரியாக்கள் அதிகரிப்பு...! - சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...!
திருவனந்தபுரத்தில் உள்ள பம்பை ஆற்றில் சபரிமலை வரும் பக்தர்கள் இந்த ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, பல இடங்களிலிருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராடி வருகிறார்கள். இதுபோல அங்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகிறார்கள்.
ஆற்றில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் -
இந்நிலையில், பம்பை நதியில் கோலிஃபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக, கேரள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் பம்பை நதியில் புனிதநீராடுவதால், இந்நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியா பாதிப்பு இருப்பதாக ஏற்கெனவே, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் எச்சரிக்கை -
இது குறித்து கேரள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவிக்கையில்,
மகர விளக்கு பூஜையின்போது பம்பை நதியில் வாரத்திற்கு ஒரு முறை கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பரிசோதனை செய்தபோது, மொத்த கோலிஃபார்மின் அளவு 500க்கு மேல் இருந்தால் குளிக்க உபயோகிக்க முடியாது.
ஆனால், பம்பை நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000க்கும் மேல் கடந்திருக்கிறது. இதற்கு காரணம், பம்பை நதியில் குளிக்க வருபவர்கள் மலம் கழிப்பது, அவர்களது ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்வது போன்றவற்றால் இந்த பாக்டீரியாக்கள் அதிகரித்துள்ளது.
இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த பாக்டீரியாக்களை தற்போது கட்டுப்படுத்த குள்ளார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.