'இது கொண்டாட வேண்டிய நேரமல்ல..போராட வேண்டிய நேரம்':வெற்றிக்கு பின் பினராயி விஜயன் பேச்சு
கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் ஆட்சியே தொடரவுள்ளதை தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை.
99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றிபெற்றுள்ளனர்.
41 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் நிலையில், 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதில் கேரள சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா, 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றிபெற்றுள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னணி வகிக்து வந்தார்.
தற்பொழுது அவர் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் தர்மதம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த பினராயி விஜயன் தெரிவித்ததாவது,
"கேரளா மக்கள் இந்த வெற்றியை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் இந்த சூழல் நாம் வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரமல்ல மாறாக கொரோனாவுக்கு எதிராக போராடும் நேரம் இது" என அவர் தெரிவித்துள்ளார்.