தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கேரளா முதலமைச்சர் சந்திப்பு
கேரளா சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
கேரளாவில் தமிழக முதலமைச்சர்
இந்த ஆண்டு தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.
கேரளா சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோவளத்தில் நேரில் சந்தித்து பேசினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.
அப்போது அவருக்கு திராவிட மாடல் ( The Dravidian Model) என்ற புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வழங்கி பொன்னாடை அணிவித்தார். நாளை கூட்டம் அதைத்தொடர்ந்து இன்று மாலை கேரள அரசின் சார்பில் நடைபெறும் கலை, இசை நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பின்னர் திருவனந்தபுரத்தில் தங்கும் அவர், நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்து வைக்கிறார். கூட்டம் முடிந்ததும், நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.