ஸ்கூட்டி ஒட்டிய பெண் செய்த சம்பவம்.. நூலிழையில் உயிர் தப்பிய முதல்வர் - அதிர்ச்சி வீடியோ!
பெண் வாகன ஓட்டியால் முதல்வரின் பாதுகாப்பு கான்வாய் விபத்திற்குள்ளாக இருந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
ஸ்கூட்டி பெண்
சாலையில் பெரும்பாலன நேரம் வாகன ஓட்டிகள் பரபரப்பன சூழலில் பயனம் மேற்கொள்வது வழக்கம். அதுபோன்ற நேரங்களில் ஒரு சிலர் வாகனங்களை வேகமாகவும், கோளாறாகவும், போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றாமல் ஒட்டுவதால்தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது.
அந்த வகையில், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார், பாதுகாப்பு வாகனங்களுடன் வாமனபுரம் சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது சாலையின் இடது புறத்தை ஒட்டி ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த பெண்,
தப்பிய முதல்வர்
எந்த விதமான சிக்னலும் செய்யாமல் சாலையில் வலதுபுறத்திற்கு க்ராஸ் செய்தார்.இதனால் பாதுகாப்பு வாகனங்கள் திடீரென ப்ரேக் போட்டதால் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும், பினராயி விஜயன் பயணித்த காரும் ஒன்றுடன் ஒன்று மெதுவாக மோதிக் கொள்ள நேர்ந்தது.
Kerala CM के काफिले की गाड़ियां आपस में टकराई! देखें वीडियो #Kerala #KeralaCM #CarAccident #collision #convoy #PinarayiVijayan #viralvideo #webdunia pic.twitter.com/jpeLKzgLPA
— Webdunia Hindi (@WebduniaHindi) October 29, 2024
நல்வாய்ப்பாக இதில் பினராயி விஜயன் காயங்களின்றி தப்பினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களிடம், சக வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் முதலமைச்சரே எச்சரிக்கையாகதான் செல்ல வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.