வயநாடு- நிவாரணத் தொகையில் EMI பிடித்த வங்கிகள்..கொதித்த கேரள முதல்வர்!
நிவாரணத் தொகையில் EMI பிடித்ததற்கு கேரள முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிவாரணத் தொகை
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. . 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சிக்கியவர்களை மீட்டனர்.
கேரள முதல்வர்
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
வங்கிகள் EMI பிடித்தம் செய்ததற்கு மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில் பேசிய அவர், "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.