திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே நகை கடைகளில் அனுமதி! தடாலடி அறிவிப்பு வெளியிட்ட கேரளா

cm kerla announce
By Anupriyamkumaresan Jun 01, 2021 05:49 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

நாடு முழுவதும் கொரோனாவின் 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வரை கேரளாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடந்த சில வாரங்களாக கேரளாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்த நிலையில், மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே நகை கடைகளில் அனுமதி! தடாலடி அறிவிப்பு வெளியிட்ட கேரளா | Kerala Cm Binarayi Announce

அதன்படி காலை 5 மணிமுதல் 7 மணி வரையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஜவுளி மற்றும் நகை கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே இந்த இரண்டு கடைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.