‘‘நாமஎல்லாரும் ஒன்னு சேரணும் ’’ - 11 மநிலங்களுக்கு கடிதம் .. பினராயி விஜயன் பிளான் என்ன?
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் ,பாஜக அல்லாத 11 மாநில முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கொரோனா தடுப்பூசி பிரச்சனையை தீர்க்க மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மருந்து நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் நேரடியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள மறுக்கின்றனர்.
எனவே, கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து மாத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
Wrote to 11 CMs in the spirit of Cooperative Federalism. Quite unfortunate that Centre absolves itself of its duty to procure vaccines, ensure free universal vaccination. United effort to jointly pursue our genuine demand is the need of the hour, so that Centre acts immediately. pic.twitter.com/ILvEFYSpRu
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 31, 2021