கேரளா முதல்வர் பினராயி விஜயன் நலம் பெற வேண்டும் - முக ஸ்டாலின்
கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக்கிய உடல்நல சிக்கல்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன்.
மேலும் அவர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்தார்.
பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.