கூகுள் மேப்பை நம்பி காரை சேற்றில் இறக்கிய ஒட்டுநர் : வைரலாகும் புகைப்படங்கள்
கேரளாவில் கூகுள் மேப் உதவியுடன் ஓட்டுநர் ஓட்டி வந்த கார் சேற்றில் சிக்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூகுள் மேப்பினால் வந்த விபரீதம்
கேரள மாநிலம் , திரூர் பகுதியை சார்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் புதுக்குளம் பகுதி நோக்கி நேற்று இரவு கூகுள் மேப் உதவியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலசித்ரா மலைபாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது.
சேற்றில் சிக்கிய கார்
இதை தொடர்ந்து , அவர் காரை மலைப்பாதை வழியாக இயக்கியுள்ளார். இரவு நேரம் என்பதால் பாதை சரியாக தெரியாமல் பாதை முடியும் இடத்தில் உள்ள வயல்வெளி சேற்றில் கார் சிக்கிகொண்டது.
சேற்றில் இருந்து காரை வெளியே எடுக்க அவர் பலமுறை முயற்சித்தும் காரை சேற்றில் இருந்து மீட்க முடியவில்லை. இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய அந்நபர், அப்பகுதி வாசிகளிடம் நடந்தவற்றை கூறி உதவி கோரியுள்ளார்.
இதனிடையே, வாகனம் ஓட்டி வந்த ஒருவரை தவிர மற்றவர்கள் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அங்கிருந்து புதுக்குளம் பகுதிக்கு சென்றனர்.