பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தர முடியாது - பினராயி விஜயன் திட்டவட்டம்
கேரள மாநிலத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகம் உள்ளதால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது சாத்தியமற்றது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலரும் உயிரழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறின. பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் கேரளா தன் வசம் மிகுதியாக இருந்த ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு கொடுத்து உதவியது
இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. மே 15 ஆம் தேதிக்குள் கொரோனா பாதித்தவர்களின் 6 லட்சமாக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஏற்கனவே தங்களிடம் இருந்த 450 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கியதால், தற்பொழுது தங்களிடம் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதாகவும், இனி தங்களால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொடுக்க முடியாது
மே 15 -ற்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் மாநிலத்துக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும். எனவே கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜனையும் தங்கள் மாநிலத்துக்கே உபயோகிக்க அனுமதிக்க வேண்டும்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.