மலை உச்சியில் பறந்து வந்த பாறை.. ரோட்டில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி...

Viral Video Kerala
By Petchi Avudaiappan Apr 29, 2022 07:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கேரளாவில் மலைப்பாதையில்  பாறை உருண்டு வந்த விழுந்ததில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் பலியானார். 

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள தாமரசேரி என்ற பகுதியில் ஏப்ரல் 16 ஆம் தேதி ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வயநாட்டிற்கு சாலை மார்க்மாக பைக் ட்ரிப் சென்றுள்ளனர். இதில் அபிநவ்(20) மற்றும் அனிஷ்(26) ஆகிய நண்பர்கள் ஒரு பைக்கில் செல்ல, இதில் அபிநவ் வண்டி ஓட்டியுள்ளார். 

பைக்  தாமரசேரி மலைப் பகுதியின் ஐந்தாவது ஹேர்பின் வளைவை தாண்டி ஆறாவது ஹேர்பின் வளைவில் சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மலையில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து சாலையில் சென்று கொண்டிருந்த இவர்களது பைக்கின் பின்பகுதியில் மோதியது. இதில், இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு மலைக்கு கீழ் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் கோழிக்கோடு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அபினவ் உயிரிழந்துள்ளார்.அனிஷுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவர்களது பைக்கிற்கு பின்னால் சென்றுகொண்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை யதார்த்தமாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து அந்த வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளது.