கேரள சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக தமிழில் பதவியேற்ற எம்.எல்.ஏ!

history kerala mla
By Irumporai May 24, 2021 02:21 PM GMT
Report

கேரள சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ ஒருவர் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து உள்ளார்.

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கேரளாவில் உள்ள தேவிகுளம் என்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம் ராஜா என்பவர் தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும் இருக்கும் வழக்கறிஞர் ராஜா இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் இருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. கேரள சட்டசபை வரலாற்றில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு எம்எல்ஏ தமிழில் பதவி ஏற்றது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது