பாலியல் வீடியோ எப்படி கசிந்தது? நடிகை கேள்வி கேட்டு மனு!
நீதிமன்றத்தின் கஸ்டடியில் இருந்த பாலியல் வீடியோ எப்படி வெளியே கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நடிகை, தற்போது நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார்.
நடிகை பாவனா
பிரபல நடிகை பாவனா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கார் டிரைவர் உதவியுடன் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.
அதை வீடியோவாகவும் எடுத்து உள்ளனர். இந்த குற்ற பின்னணியில் இருந்த முதன்மைக் குற்றவாளி பிரபல நடிகர் திலீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
நடிகர் திலீப்
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் டிசம்பர் 14ம் தேதி பிரின்ஸிபல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் வசமிருந்த மெமரி கார்டில் இருந்த பாலியல் வீடியோ வெளியே கசிந்தது.
இதையடுத்து நீதிமன்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கிரைம் பிரான்ச் அனுமதி கேட்டதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கும் , பிரதமருக்கும் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நடிகை.
வீடியோ
இந்த நிலையில், வீடியோ வெளியானது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் நடிகை . அவர் தாக்கல் செய்திருக்கும் இந்த மனுவில்,
நீதிமன்ற கஸ்டடியில் உள்ள மெமரி கார்டில் இருந்து பாலியல் காட்சிகள் வெளியே கசிந்த சம்பவத்தில் விசாரணை நடத்தவேண்டும். அந்த மெமரி கார்டில் இருந்தது எனக்கு எதிராக நடந்த கொடுமைகள் அடங்கிய காட்சிகள்.
பாலியல் வழக்கு
அதை வெளியே விட்டது யார் என்பது தெரிய வேண்டும். அந்த மெமரி கார்டில் இருப்பது வெளியே கசிந்தால் எனது எதிர்காலத்தை பாதிக்கும். ஆகவே நீதிமன்ற கஷ்டத்தில் இருந்த வீடியோவை யாரோ பரிசோதித்திருக்கிறார்கள்.
அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நடிகை பாலியல் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
அதேசமயம் வீடியோ நீதிமன்றத்திலிருந்து வெளியே சென்றது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து இரண்டு மூன்று நாட்கள் போதும் என்று அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.