மூளையை தின்னும் அமீபா தொற்று; 4 பேர் பலி - அதிகரிக்கும் அச்சம்!
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
அமீபா தொற்று
கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றில் உயரிழந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமானைச் சேர்ந்த விஜயன் 57, என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

அவருக்கு சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சையின் போது அவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
4 பேர் பலி
இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது, பொதுவாக மக்கள் மாசுபட்ட குளங்கள், ஏரிகள் அல்லது குளோரின் சேர்க்கப்படாத குளங்களில் நீந்தும்போது அல்லது குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தேங்கி நிற்கும் நீரில் நீந்துவதைத் தவிர்ப்பது மற்றும் மூக்கைக் கழுவுவதற்கு முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.