டிவி ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை... - அடுத்து நடந்தது என்ன? - அதிர்ச்சி சம்பவம்...!
கேரள மாநிலத்தில் டிவி ரிமோட் பேட்டரியை 2 வயது குழந்தை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டிவி ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், டிவி ரிமோட்டில் இருந்த 5 சென்டிமீட்டர் நீளமும், ஒன்றரை சென்டிமீட்டர் அகலமும் கொண்ட பேட்டரியை 2 வயது ரிஷிகேஷ் என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது விழுங்கியது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தைக்கு எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் உள்ள பேட்டரியை அகற்ற முடிவு செய்தனர்.
இதனையடுத்து, குழந்தைக்கு எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் உள்ள பேட்டரியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி 2 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து, நிம்ஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் நோய் நிபுணர் ஜெயக்குமார் பேசுகையில்,
சரியான நேரத்தில் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்தததால், எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் உள்ள பேட்டரியை அகற்ற முடிந்தது.
முதலில் நாங்கள் பெற்றோரிடம் குழந்தைக்கு என்ன நடந்தது என்று கேட்டோம். பெற்றோர்கள் விவரத்தை சொன்ன பிறகு, நாங்கள் உடனடியாக ஆபரேஷன் தியேட்டருக்கு குழந்தையை கொண்டு சென்று, குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்தோம்.
சுமார் 20 நிமிடங்களில் குழந்தையின் வயிற்றிலிருந்து பேட்டரியை வெற்றிகரமாக அகற்றினோம். பெற்றோர்கள் குழந்தையை தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால், இந்த விஷயம் மிகவும் மிகவும் கடினமாகி இருக்கும். தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது என்றார்.