10 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்: நெகிழ்ச்சி சம்பவம்
கேரளாவில் 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்
கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு, இரண்டு கண்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை அவரது பெற்றோரின் ஒப்புதலின் அடிப்படையில் தானம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்த வயதில் உடல் தானம் செய்யப்படுவது கேரளாவில் இதுவே முதல் முறையாகும்.
The passing of 10-month-old Alin Sherin Abraham in a road accident at Kottayam has deeply saddened us all. In the midst of unimaginable pain, her parents, Arun Abraham and Sherin Ann John, chose to donate her organs. By becoming Kerala’s youngest organ donor, little Alin has… pic.twitter.com/cKsjCnnuAz
— Pinarayi Vijayan (@pinarayivijayan) February 14, 2026
குவியும் பாராட்டு
உடல் உறுப்பு தானம் வழங்க ஒப்புதல் வழங்கிய குழந்தையின் பெற்றோர் அருண் ஆபிரகாம், ஷெரின் ஜான் இருவரின் செயலையும் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், மற்றும் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், மிகவும் குறைந்த வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு இருப்பது கேரள மாநிலத்தின் உண்மையான உணர்வை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர், உறுப்பு தானம் செய்ததன் மூலம் சிறுமி 5 நபர்களுக்கு புதிய வாழ்கை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது கேரளாவின் உண்மையான உணர்வையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சாத்தியமாக்கிய அனைத்து சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையை பாராட்டுவதாகவும் உயிரிழந்த அலின் ஷெரின் அபிரகாமுக்கு உரிய மரியாதையுடன் விடை கொடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.