தாய்லாந்து, மலேசியாவைத் தொடர்ந்து இனி இங்கேயும் விசா வேண்டாம் - டூர் போலாம்!
கென்யா சர்வதேச பயணிகளின் விசா தேவையை நீக்கியுள்ளது.
கென்யா
இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது விசா இல்லாமல் மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் தற்காலிகமாக பயணிக்கலாம்.
இதனைத் தொடர்ந்து, உலகின் எந்த மூலையிலிருந்தும் யாரும் கென்யாவிற்கு வர விசாவிற்கு விண்ணப்பிக்கும் சுமையை இனிமேல் சுமக்க வேண்டிய அவசியமில்லை என கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
விசா சேவை நீக்கம்
வனவிலங்கு சஃபாரிகள் மற்றும் கடற்கரை விடுமுறைகளை அனுபவிக்க பார்வையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத பயணத்தை வழங்கும் இந்த நடவடிக்கை நாட்டின் முக்கியமான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுழைவு செயல்முறையை எளிதாக்க மின்னணு பயண அங்கீகாரத்திற்கான டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்துகிறது. இது இது விசா விண்ணப்பங்களின் தேவையை நீக்கும். பிரிட்டனிடம் இருந்து கென்யா சுதந்திரம் பெற்ற 60வது ஆண்டு நினைவு நிகழ்வின் போது இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு மசாய் மாரா சஃபாரி, சிம்பா சஃபாரி, ட்விகா சஃபாரி, லயன் சஃபாரி மற்றும் டெம்போ சஃபாரி போன்றவற்றை கண்டு களிக்கலாம்.