உண்ணாவிரதம் இருந்தால் கடவுளைக் காணலாம் : மத போதகரின் பேச்சால் பறிபோன 73 உயிர்கள்

Kenya
By Irumporai Apr 27, 2023 11:02 AM GMT
Report

கென்யாவில் மத போதகர் ஒருவருக்குச் சொந்தமான பண்ணையில் தோண்டத் தோண்ட பிணங்கள் கிடைத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்பிரிக்கா 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடலோர பகுதியான மாலின்டி நகரைச் சேர்ந்தவர் பால் மெகன்சி. கிறிஸ்தவ அமைப்பின் தலைவரான இவரது பண்ணையில் சிலர் உணவின்றி உடல் மெலிந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் உணவின்றி மெலிந்த நிலையில் இருந்த 15 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அதிர்ச்சியில் உலக நாடுகள்

இதுகுறித்து, உணவு, தண்ணீர் இன்றி உண்ணாவிரதம் இருந்தால் கடவுளைக் காண முடியும் என பால் மெகன்சி அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். அதை நம்பிய மக்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகிறது. இது தொடர்பாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றதன் நிலையிலேயே அங்கு சென்று விசாரணை நடத்தினோம்.

அதில்தான் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 11 பேரில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது