800 ஏக்கர் பண்ணையில் உடல் மெலிந்து உயிரிழந்து கிடந்த 200க்கும் மேற்பட்ட உடல்கள்..!

Death
By Thahir May 15, 2023 05:54 AM GMT
Report

கென்யாவில் 800 ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டினி கிடந்ததால் உயிரிழந்த உடல்கள் 

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடலோர பகுதியான மாலின்டி நகரில் பால் மெக்கன்சி என்பவர் வசித்து வந்தார்.

அவருக்கு சொந்தமாக 800 ஏக்கரில் பண்ணை ஒன்று உள்ளது இங்கு உடல் மெலிந்து கிடப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் 26ம் தேதி தகவல் கிடைத்தது.

800 ஏக்கர் பண்ணையில் உடல் மெலிந்து உயிரிழந்து கிடந்த 200க்கும் மேற்பட்ட உடல்கள்..! | Kenya More Than 200 People Death

இதையடுத்து அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பட்டினி கிடந்தால் இயேசுவை அடையாலம் என பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால் இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து பண்ணை முழுவதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. நேற்றும் மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 201 ஆக அதிகரிப்பு 

இதையடுத்து பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலங்களுக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் பட்டினி, மூச்சுத் திணறர் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் பல சடங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.