சொர்கத்திற்கான வழி இது தான்..! 425 பேரை கொன்று குவித்த பாதிரியாரின் வெறிச்செயல்..!
மக்கள் இன்னும் ,மூடநம்பிக்கைகளை நம்பி ஏமாந்து வருவது பெரும் கவலையை தான் தருகிறது.
பாதிரியாரின் வெறிச் செயல்
கென்யா நாட்டின் மாலிண்டி என்ற நகரைச் சேர்ந்தவர் பால் மெகன்சி. இவர் பாதிரியாராக உள்ளார். அவருக்கு சொந்தமான பண்ணையில் 15க்கும் மேற்பட்டோர் உடல் மெலிந்து இருப்பதாகவும், அவர்களில் நான்கு பேர் இறந்து விட்டதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் வழக்கை உடனடியாக விசாரிக்க துவங்கிய காவல் துறைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த விசாரணையில் கென்யாவின் கடலோரப் பகுதியான Shakahola காட்டில் 425 பேரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் பேரதிர்ச்சியை கொடுக்கும் தகவல் என்னவென்றால் 425 பேரில் 191 பேர் குழந்தைகள் ஆவர். உடலை பிரேத பரிசோதனை செய்த போது, பலியானவர்களில் பெரும்பாலானோர் பசியாலும் குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டு அல்லது அடித்து அல்லது மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரிய வந்தது.
இந்த வழக்கில் பாதிரியார் Paul Mackenzie'யுடன் சேர்த்து 29 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், Paul Mackenzie தன்னை பின்தொடர்பவர்களை உலகம் அழியும் முன் சொர்க்கத்திற்கு செல்வதற்காக வழி பட்டினி கிடந்தது இறப்பது தான் என்று உத்தரவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.