ஆதரவான துணை வேண்டும் - ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு கெனிஷா பதிலடி

Tamil Cinema Viral Photos Aarti Ravi Ravi Mohan
By Sumathi May 11, 2025 12:00 PM GMT
Report

கெனிஷா பிரான்சிஸ் இன்ஸ்டா பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்தி ரவி அறிக்கை

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் நடிப்பில் தற்போது பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இவருக்கு 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஆதரவான துணை வேண்டும் - ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு கெனிஷா பதிலடி | Kenisha S Indirect Response To Arthi Ravi

சுமார் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இவரது மகள் ப்ரீத்தாவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரவி மோகனும் கலந்துகொண்டார். அவருடன் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸும் கைக்கோர்த்து வலம் வந்த புகைப்படங்களும், வீடியோக்களும் படுவைரலாகி பேசு பொருளானது.

பிரசாந்த் அப்படித்தான்; அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார் - நடிகை கிரண் ஓபன் டாக்

பிரசாந்த் அப்படித்தான்; அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார் - நடிகை கிரண் ஓபன் டாக்

கெனிஷா பதிலடி

இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி, சட்டமும் தானும் முடிவு செய்யும் வரை ஆர்த்தி ரவி என்பது மாறாது. தனது குழந்தைகளுக்காக ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை, தன்னை முன்னாள் மனைவி என அழைப்பதை தவிர்க்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஆதரவான துணை வேண்டும் - ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு கெனிஷா பதிலடி | Kenisha S Indirect Response To Arthi Ravi

தற்போது இதற்கு மறைமுகமாக பதிலடி தருமாறு பாடகி கெனிஷா இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுகளைக் கொண்டவர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன - ஒன்று அவர்களுக்கு ஆதரவான துணையைப் பெறுவார்கள், அல்லது அவர்கள் ஒரு துணை இல்லாமல் வாழ்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.