கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதிநிதியாக பேசக்கூடாது: மத்திய அமைச்சர் கண்டிப்பு

covid19 singapore kejiriwal
By Irumporai May 19, 2021 10:50 AM GMT
Report

சிங்கப்பூரில் குழந்தைகளிடம் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுவருகிறது. இந்தியாவில் காணப்படும் பி.1.617.2 என்ற மாற்றமடைந்த கொரோனா வைரஸ் சிங்கப்பூரிலும் பரவி இருப்பதாக அந்நாடு தெரிவித்தது.

இந்த நிலையில் டெல்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ட்வீட்டர் பதிவில்:

சிங்கப்பூர் உடனான விமான சேவைகளை உடனடியாக மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம்,  வெளியிட்டுள்ள தகவலின் படி சிங்கப்பூரில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக  கூறும் கருத்துகள் உண்மைக்கு மாறானாவை என தெரிவித்துள்ளது.

அதே சமயம் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருப்பது இந்தியாவில் உருவானதாகக் கூறப்படும் பி.1.617.2 வகை வைரஸ்தான்' எனத் தெரிவித்தது.

கெஜ்ரிவால் பதிவிற்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்தோடு இந்தியத் தூதரை அழைத்து வருத்தத்தைத் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது ட்வீட்டர் பதிவில்:

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டன.

[P49OSD}

இருப்பினும், நன்கு பேசவேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள், நீண்டகால ஒத்துழைப்பை பாதிக்கும் என கூறினார்.

சிஙகப்பூர் இந்திய விமானக் கொள்கை குறித்து பேச டெல்லி முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தார்.