தேர்தல் வெற்றி - அனுமான் கோவிலில் தரிசனம் செய்த கெஜ்ரிவால்

darshan kejriwal 5-state-election-results-2022 கெஜ்ரிவால் hanuman-temple தேர்தல் வெற்றி அனுமான் கோவில் தரிசனம்
By Nandhini Mar 10, 2022 09:07 AM GMT
Report

 இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மன் போட்டியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெற்றியை நோக்கி முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதனையடுத்து, விரைவில் அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப்பில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்தில் புரட்சியை ஏற்படுத்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, தற்போது அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் டெல்லியில் உள்ள ஹனுமான் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.