வாக்குமூலங்கள் எதிராக இல்ல; தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது ஏன்? ED - க்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தற்போது, நீதிமன்றக் காவலில் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ED - க்கு சரமாரி கேள்வி
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம்.
கெஜ்ரிவால் மீதான வழக்கில் சொத்து முடக்கம் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மே 3ம் தேதி வழக்கின் அடுத்த விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.