டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு - கெஜ்ரிவால் அறிவிப்பு..!

india lockdown kejriwal announces
By Irumporai Apr 25, 2021 07:08 AM GMT
Report

டெல்லியில் நாளை முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு. இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

இதில்,டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 5 மணிவரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.