இப்படி ஆகும்னு தெரிந்தா நடித்திருக்கவே மாட்டேன் - கீர்த்தி சுரேஷ் வேதனை
ரகு தாத்தா படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
அட்லீ இயக்கத்தில் ரூ.160 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 60 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாககூறப்படுகிறது.
ஹிந்தி திணிப்பு
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியடையாத நிலையில் படத்தின் நாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் இது குறித்து பேசியுள்ளார். கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரகு தாத்தா டைம்ல நான் பாலிவுட்டில் அறிமுகமாக போறேன்னு தெரிஞ்சிருந்தா, நான் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன்.
இந்த படத்தில் ஹிந்தி திணிப்பை தான் சொல்கிறோம். டீசர் வெளியான போது, நம்ம ஆட்கள் எல்லாம் பயங்கரமா சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்டாங்க. ஆனால், இப்போது தான் இந்தியில் அறிமுகமாகுகிறீர்கள். அதற்குள் எங்க மொழியைபற்றி இப்படியா, பேசுவது என்று பாலிவுட் ரசிகர்கள் கமெண்ட் போட்டார்கள்.
இது ஹிந்தி திணிப்பு பற்றிய படமே தவிர, இந்திக்கு எதிரான படம் இல்லை என்று சொல்லி புரிய வைக்க வேண்டுமென நினைக்கிறேன். இப்படி ஆகும்னு தெரிந்திருந்தால், இந்த படத்தில் நடித்திருக்கவே மாட்டேன்" என பேசினார்.