கீர்த்தி சுரேஷ் தோழில் சாய்ந்திருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? - வெளிவந்த உண்மை தகவல்!
நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு நபருடன் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளியான தசரா படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
புகைப்படம்
இந்நிலையில், இவர் சமீப காலமாக தொடர்ந்து காதல் சர்ச்சையில் இருந்து வருகிறார். ஆனால் அது அனைத்தும் வதந்தி உண்மை இல்லை என்று இவரது தந்தை சுரேஷ் கூறி அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பின்னர் தற்போது இவர் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் இவர்தான் கீர்த்தியின் காதலரா என்று இணையத்தில் கேட்டு வருகிறார்கள். ஆனால் இவர் கீர்த்தியின் நண்பர் என்று தற்பொழுது தெரியவந்துள்ளது. மேலும், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil