இணையதளத்தில் வைரலாகும் கீர்த்திசுரேஷின் யோகா உடற்பயிற்சி வீடியோ...!
நடிகை கீர்த்திசுரேஷின் யோகா உடற்பயிற்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார்.இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில், ‘ராக்கி’ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படம் வெளியானது. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், கண்ணா ரவி, லிஸ்டில் ஆண்டனி, வினோத் உட்பட பலர் நடித்தனர். தற்போது ‘மாமன்னன்’, ‘தசரா’, ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
கீர்த்திசுரேஷின் உடற்பயிற்சி வீடியோ
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அனைத்து டென்ஷனையும் விலக்கி வைக்க, யோகாவை தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டு, அவரின் யோகா உடற்பயிற்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.