கீர்த்தி சுரேஷ்க்கு என்ன ஆச்சு? முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் வெளியான புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்

Keerthy Suresh
By Nandhini Jul 15, 2022 08:18 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சமீபத்தில், ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படம் வெளியானது. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், கண்ணா ரவி, லிஸ்டில் ஆண்டனி, வினோத் உட்பட பலர் நடித்தனர்.

கீர்த்தி சுரேஷின் ரத்தம் வழிந்த புகைப்படம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷ் கன்னம் வீங்கி ரத்தம் வழியும் புகைப்படம் வைரலாகி வருகிறது. முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் வெளியான புகைப்படம் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்கானார். ஆனால், இந்த ரத்தம் வழியும் கறை படிந்த முகம், ‘சாணி காயிதம்’ படத்திற்காக மேக்கப் போடப்பட்டதாக வீடியோ வெளியானதால், ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.    

Keerthy Suresh