கீர்த்தி சுரேஷூக்கு விரைவில் டும்..டும்..டும்.. - இணையதளத்தில் தீயாய் பரவும் தகவல்
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில், ‘ராக்கி’ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படம் வெளியானது. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், கண்ணா ரவி, லிஸ்டில் ஆண்டனி, வினோத் உட்பட பலர் நடித்தனர்.
தற்போது ‘மாமன்னன்’, ‘தசரா’, ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
விரைவில் திருமணம்?
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷின் திருமணச் செய்தி தீயாய் பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், அரசியலில் உள்ள ஒரு பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது இச்செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆவணியில் யார் வீட்டில் பணம் கொட்டப்போகுது? இந்த 5 ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Manithan

சூரியனின் மிகப்பெரிய ராசி மாற்றம்... நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு அமோகமாய் இருக்கப்போகும் ராசியினர்கள்; Manithan

கிழிந்த ஆடையில் முட்டி தெரிய இலங்கை பெண் லொஸ்லியா! இந்த திடீர் மாற்றத்திற்கு யார் காரணம் தெரியுமா? Manithan
