என் கணவர் இவரை மாதிரிதான் இருக்க வேண்டும்... - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்... - ஷாக்கான ரசிகர்கள்..!
தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார்.இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில், ‘ராக்கி’ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படம் வெளியானது.
இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், கண்ணா ரவி, லிஸ்டில் ஆண்டனி, வினோத் உட்பட பலர் நடித்தனர். தற்போது ‘மாமன்னன்’, ‘தசரா’, ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
கிசுகிசுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்
சமீப காலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் பெயர் சமூகவைலத்தளங்களில் அடிப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷும், நடிகர் விஜய்யும் நெருக்கமாக பழகி வருவதாகவும், அவர்களுக்குள் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்ஷின் கட்டுப்பாட்டில் விஜய் இருப்பது போல புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனால், விஜய்க்கு, மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரச்சினை பெரியதாக விவாகரத்து வரை சென்றுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு சேனலில் பேட்டி கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில், கீர்த்தி சுரேஷிடம் உங்களின் வருங்கால கணவர் யாரைப் போல் இருக்க வேண்டும் என்று அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 8 நடிகர்களின் போட்டோக்கள் காண்பிக்கப்படுகிறது.
இதை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ், எனது வருங்கால கணவர் தளபதி விஜய் போல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷை கலாய்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.