நடிகை கீர்த்தி சுரேஷூக்கு எதிராக வைரலாகும் வீடியோ - தந்தை டிஜிபியிடம் புகார்
நடிகை கீர்த்தி சுரேஷூக்கு எதிராக வைரலாகும் வீடியோ தொடர்பாக அவரது தந்தை திருவனந்தபுரம் டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தென்னிந்தியாவின் முன்னனி நடிகையாக பிஸியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மேலும் மோகன் லாலுடன் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற மல்டிஸ்டார் படத்திலும் நடித்தார்.
'மரைக்காயர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் பலர் சமூக வலைதளங்களில் அந்தப் படத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன் அந்தப் படத்தில் அர்ச்சாவாக நடித்ததற்காக ஒருவர் கீர்த்தி சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளிட்டதாக கூறப்படுகிறது.
இது கேரளாவின் நடிகர் சங்கத் தலைவரும் முன்னனி நடிகருமான மோகன் லாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவர் அந்த வீடியோ கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு அனுப்பிவைத்தார்.
கீர்த்தியின் தந்தை வீடியோ தொடர்பாக திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.