காதலை சொல்வது எப்படி? நடிகருக்கு வகுப்பெடுத்த கீர்த்தி சுரேஷ்
3 மொழிகளில் கீர்த்தி சுரேஷ் ஐ லவ் யூ சொல்ல கற்று தரும் வீடியோ வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் மட்டும் கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாளை(25.12.2024) திரைக்கு வர உள்ளது.
வருண் தவான்
தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான தெறி படம்தான் பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் பட ஹீரோவான வருண் தவானுடன் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் எப்படி ஐ லவ் யூ சொல்வது என வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் கற்று தருகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.