கீர்த்தி சுரேஷ் மகன் இவர் தானாம்...வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்
குழந்தைகள் தின நாளில் தனது மகன் இவர் தான் என்று கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கீர்த்தி சுரேஷ் மகன் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். தசரா மற்றும் போலா ஷங்கர் ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற மலையாள படமான வாஷி என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடத்திருந்தார்.
இந்த நிலையில், குழந்தைகள் தினம் கடந்த 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் போட்டோவுக்கு போஸ் கொடுடா என்று நாயிடம் கேட்கிறார்.ஆனால் அவரது சொந்த பிள்ளையாக பார்க்கும் அந்த நாய் அவரை கடைசி வர கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை.
மேலும் இந்த பதிவில் இது என்னுடைய மகன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.